உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திருமதி.அபிராமி கவிதாசன்.

திருமதி.அபிராமி கவிதாசன்.

23.08.2022 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 185, தலைப்பு ! “கோடை விடுமுறையும் நீச்சல் குளமும்” நீச்சல் குளமுடனே நித்தம் நிலாப்பெண் உலாவி ஊர்வலம் மின்னலாய் புன்னகை சிந்தி மிளிர்ந்தன அகமும் முகமும் // நட்சத்திரக் கூட்டங்களாய் நட்பு வட்டம் நடமாடி மகிழ்ந்திடும் கோடைவிழா வானமகள் நீலவண்ண தோரணமாய் வண்ணம் தந்தால் குளத்தினிலே // அருகருகே தோழியரை அணைத்தபடி அன்புமழை பொழிந்திட்ட மேகக்கூட்டம் வெள்ளிநிலா நீரினிலே மிதந்தபடி வெள்ளை நகைப்பினிலே மகிழ்ந்தபடி // நித்தம் நித்தம் புதுவரவை நெஞ்சமெங்கும் தஞ்சம் கொண்டேன் திங்கள் ஒன்று மகிழ்வுகொண்டு தினங்கள் சென்றன மிகநன்றென //