உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திருமணம்

திருமணம்

ஜெயம் தங்கராஜா இருமனங்கள் ஒருமனமாகும் அதிசயத்தின் நாள் திருமணமாகி ஈருயிர் ஓருயிராகும் திருநாள் பருகிடும் தேனிலும் சுவையான உணர்வாம் இருவரும் அனைத்தும் மறந்திடும் கணமாம் சிறக்கடித்து பறக்கும் இளமையின் ஆசை உறவொன்றின் அருகாமையில் சுகங்களின் ஓசை ஒருவர் அருமையை இன்னொருவர் புரிந்து இருவரும் படைப்பாரே ஆனந்த விருந்து வயது முதிர்ந்தாலும் விலகுமா சொந்தம் துயர இருட்டிலும் வெளிச்சமாகும் பந்தம் சந்ததி பெருக்கவே ஏற்படுத்தும் நிகழ்வு இந்த நாளிலன்றோ கிளைபரப்பும் மகிழ்வு