உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திருமணமாம்

திருமணமாம்

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-65 11-03-2025 பெற்றோரின் ஆசியுடன் பெரியோரின் அரவணைப்பில் தலைமுறை தழைக்கவென தலைமுறையாய் வந்ததிங்கே இருமனம் ஒருமனதாய் இணையும் நன்நாளாம் திருமணமாம் இத்திருநாளில் ஒருகணமும் பிரியாது ஒன்றித்து வாழ்ந்து இளம் சந்ததிக்கு இயம்பியே செல்வோம் இல் வாழ்வுதனை! இயற்கையின் நியதியில்லை இறைவனின் எண்ணமுமில்லை குடும்பத்தின் அமைதியுமில்லை கொடுமை கொண்டாடுவதேனோ? ஓரினம் சேர்ந்திங்கு எதிர்கால சந்ததி அற்று வாழ்தலின் புரிதலகன்று வாழ்தலே தகுமா இன்று?