உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தியாக மைந்தன் திலீபன்

தியாக மைந்தன் திலீபன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-36 26-09-2024 தியாக மைந்தன் திலீபன் மக்களின் விடிவிற்காய் மனிதநேயம் கொண்டு உண்ணா நோன்போடு உயிர்நீத்த மைந்தனே! காக்கைக்கு உணவளித்து கடும் விரதம் புரிபவரும் இறந்தவர்க்கு திதி செய்து இதயம் நிறைபவரும் வாழ்ந்த எம் பூமியில் வயிற்றுப் பசி கொண்டு தீபமாய் உருகி கருகி தீர்த்தாயே தியாகியே! உலகமே உற்று நோக்கி ஊமையாய்ப் போனதே உன்கனவு விரைவில் மலரும் ஊரெழு உத்தமனே! இனத்திற்காய் வாழ்ந்தோரை இதயத்தால் வாழ்த்திடுவோம் இவர்கள் தியாகத்தை இருகரம் கூப்பி வணங்கிடுவோம். நன்றி வணக்கம். ஜெபா ஸ்ரீதெய்வீகன்.