உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தியாகம் 93

தியாகம் 93

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 02-12-2025 விதை ஒன்று மண்ணில் வீழ்ந்து விருட்சமாய் பரந்து செழிக்கிறது தன் நிழலைத் தானம் தந்து, தவித்தோர்க்கு குளிர்ச்சி அழிக்கிறது. பெற்றோரின் தியாகத்திற்கு நிகர் பெரிதாய் ஏதுமில்லை இவ்வுலகில் மெழுகுவர்த்தியாய் தமை உருக்கி மேலோங்க துணை பெற்றவரே சிலர் வாழ்ந்து மறைவர், சிலர் மறைந்தும் வாழ்வர் சரித்திரத்தில் தியாகிகள் சாய்வதில்லை உயிரற்றும் வாழ்வரே கோபுரத்தின் அத்திவாரம் போலும் கோலகலமாய் ஒளி தரும் விளக்கு திரியாயும் பல தியாகங்கள் மறைகின்றன பார் போற்றும் தியாகியாய் தொடர்வோம் நாம்.