உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தியாகம்

தியாகம்

ஜெயம் ஒரு நிமிடம் சோர்வறியாது உலகை மறந்து உருவாக்கும் அதிசயம் அதுதான் தாயவள் தியாகம் தன் தியாகத்தை தியாகமென நினைக்காதவளே தாய் தன்னையே மறந்து சேய்க்கான புனித பயணம் தாயைப்பற்றி நூறாயிரம் கவிதை எழுதினாலும் முழுமையடையாது தாயைப்போல தூய சொந்தமெதுவும் உறவுகளுக்குள்ளே கிடையாது இவ்வளவு பரிசுத்தமான அன்பு ஆழமான தியாகம் அவ்வளவு அர்ப்பணிப்புக்களுடன் சுழழ்கின்றது தாயவள் உலகம் என் வாழ்வின் தொடக்கத்திற்கு காரணமாக திகழ்ந்தாள் தன் விழிக்குள் எனை கனவாக்கி மகிழ்ந்தாள் என் நிழலுக்கும் பாதுகாப்பான காவல் கோட்டை தன்னருகில் எனையமர்த்தி பாடிவைத்தாள் வாழ்க்கைப்பாட்டை