உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தியாகத்தின் சின்னம்

தியாகத்தின் சின்னம்

ரஜனி அன்ரன் (B.A) “ தியாகத்தின் சின்னம் “ 29.05.2025 தன்னலமே இல்லாத உறவு தன்னம்பிக்கை கொண்ட ஜீவன் தனக்கென வாழாது எமக்கென வாழ்ந்து நம்பிக்கையின் வலிமையை உணர்த்திய உன்னத எந்தை தியாகத்தின் சின்னமே ! நிழலாகிய நேசம் நேசத்தின் தீரம் தோழனாய் நின்ற தோழமை உழைப்பினில் களைப்பின்றி உழைத்திட்ட உழைப்பாளி வாழ்வினை அழகாக்கிய பாசத்தின் உருவம் தந்தையே ! அன்பின் ஆழத்தை மனதினில் புதைத்து ஆசைக் கனவுகளை நெஞ்சினில் சுமந்து - தான் எட்டாத உயரத்தை நாம் தொட்டுவிட எமக்காய் துடித்த ஜீவனை எட்டமுடியா இடத்திற்கு அழைத்திட்டானே காலனும் விரைந்து தியாகத்தின் சின்னத்தைப் பாதி வயதினிலே ! https://www.youtube.com/watch?v=g-hocMW1udQ