உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திங்கள் 99

திங்கள் 99

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-01-2026 தேங்கி நிற்கும் நீரல்ல வாழ்வு தேடுதல் நிறைந்து ஓடும் நதி ஞாயிறு தந்த ஓய்வை நகர்த்தி நமது கனவை மனதில் இருத்தி திங்கள் தொடங்கி உழைத்து வர தீராக் கடனும் தீர்ந்து போக கடிகார முட்கள் ஓடும் முன்னே கனவு சுமந்து போராடு நீயே நாட்கள் மெல்ல நகர்ந்து செல்ல ஞாயிறு வந்து ஓய்வைச் சொல்லும் திங்கள் காலை தேநீர் கையில் திடமாய் வாரத்தின் பெட்ரோல் போல மடிந்து கிடந்தால் மகுடம் இல்லை மனிதா உழைத்தால் வெற்றி உனக்கே விடிந்து எழுந்தால் மட்டும் போதாது விவேகம் இங்கே உழைப்பாய் மாறட்டும்