உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

“தாயுமானவர்..”

“தாயுமானவர்..”

சிவதர்சனி இரா வியாழன் கவிதை நேரம்..!! கவி-2161 “தாயுமானவர்”.. தாயுக்கும் தாயாகி சேயுக்கும் தாயாகித் தரணியிலே முதலானவர் தந்தை எனும் அற்புதமே.. கருவாகி உருவாகக் காரணி இவரே தான் கடமை கண்ணியம் கற்றதும் இவரிடத்தேதான்.. வலுவான கரமிரண்டு அரவணைப்போடு அள்ளியது உரமூட்டி வளர்த்தது உணர்விலே உறைத்தது.. பாசத்தைப் பாடமாக்கி பக்குவத்தைப் பூடகமாக்கி கூட்டுக்குள் குருவிகளை காத்த ஆண்தெய்வமன்றோ.. தோளிலே ஏற்றி வைத்து தோழமையாய் அணைத்திடும் ஏழ்மையற்ற மாமனிதம் தாயுமான பராபரமே.. சிவதர்சனி இராகவன் 5/6/2025