உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தாயுமானவர்

தாயுமானவர்

ரஜனி அன்ரன் “ தாயுமானவர் “ ( B.A ) 05.06.2025 தமிழுக்கு மெய்ப்பொருள் தனை உணர்த்திய தாயுமானவரை அறிந்தேன் இலக்கியத்தில் நான் ஒன்றுமறியேன் பராபரமேயென்று நாசூக்காய் பாடிவைத்தார் பண்ணோடு தாயுமானவராய் வாழ்கின்றார் தந்தையர் தன்னலம் கருதாத தாய்மையோடு தாயுமானவராய் வாழும் தந்தையரைப் போற்றிடுவோம் ! அறியாத அகவையில் புரியாத பருவமதில் அன்பான தந்தையை இழந்தசோகம் அன்னையே தந்தையும் தாயுமாகி - எமை அரவணைத்து வளர்த்த பாசம் ஆளாக்கிய நேசம் வாழ்வினை அர்ப்பணித்த தியாகம் அத்தனையும் பெரும்தியாகம் ! உலகவரலாற்றில் பதியப்படாத காவியம் உன்னத உயிரோவியம் தந்தை தந்தையென்ற சொல்லுக்குள் மந்திரங்கள் ஆயிரம் தாயுமானவராய் குடும்பத்தைக் காத்திடும் இயந்திரம் ! https://www.youtube.com/watch?v=-WMtK9K0NKU