உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

“தாயுமானவர்”

“தாயுமானவர்”

நேவிஸ் பிலிப் கவி இல (450) உடன் வாழ்ந்த தெய்வம் உலகிற்கே எனை வார்த்த தியாக தீபம் கடன் தீர்க்க முடியா அன்பு அளவிலா பாசப் பரிமாற்றம் தன்னலங்கள் துளியேதும் நான் கண்டதில்லை வருந்தாது வசந்தங்கள் நான் காணவென்று நான் நடக்க தான் நடந்த முட்பாதை அகற்றி வளமாய் என்னை வாழ வைத்த கரை காணாத் தாய்மை என் வாழ்வில் பசுமை தங்க நாளும் சுமை தாங்கியாய் சுழன்றோடும் சக்கரமாய் ஓடி உழன்ற என் தந்தை என் பருவ காலத்திலே தந்தையும் தாயுமாகி கண்ணியமாய் வளர்த்தெடுத்து பக்குவமாய் கரை சேர்த்த தாயுமானவர் எந்தை நினைக்கின்றேன் நன்றியுடன்