உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

" தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் "

" தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் "

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய் திரள்கிறது போர்மேகமாய் அழகிய நீலவானமும் அலங்கோலமானதே வல்லரசின் மிதவாதப்போக்கில் அல்லாடுதே உலகப்பரப்பும் ! வானம்பார்த்த பூமிக்கும் வாடிப்போன பயிருக்கும் வாடிக்களைத்த மானிடனுக்கும் தண்ணீர்தான் முதல்தெய்வம் தாகம்தீர்த்த கிணறுகளோ இன்று சோகத்தோடு சாட்சிசொல்லும் குழியாச்சு உலகில் முக்கால்பங்கும் உடலில் முக்கால்வீதமும் நிறைந்திருப்பது நீராலேநீராலே நீரின்றி உலகேது ? நீரின்றி வாழ்வேது ? மூன்றாம்உலக யுத்தமொன்று முற்றிலுமாய் நீருக்கென்றாக தேசஎல்லைகள் எல்லாம் நீரின் திசைக்காய் நிற்க ஹோர்மூஸ் நீரிணையை பணயம்வைத்தல் முறையோ ? பாயும்நதியோ பொதுச்சொத்து அதற்கு வேலியிடுவது நியாயமோ ! https://www.youtube.com/watch?v=L4M5C1gypVY