உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

" தடமது படைத்தெழும் தனித்துவம் "

" தடமது படைத்தெழும் தனித்துவம் "

“ தடமது படைத்தெழும் தனித்துவம் “ கவி...ரஜனி அன்ரன் (B.A) 06.06.2024 முதல் ஒலியாய் ஒலித்து முழுமதியாய் நிறைத்து முத்தமிழை வளர்க்க இலண்டன் நேரமாகி இலண்டன் தமிழாகி கண்டமெல்லாம் கடந்து அண்டமெல்லாம் நிறைந்து பாரெல்லாம் ஒளிரும் பாமுகமே ! தடமது படைத்திடும் தனித்துவமாய் தமிழதை வளர்த்திடும் மகத்துவமாய் தலைமுறை நோக்கிய பயணமதாய் தடயத்தைப் பதித்து மகுடத்தைச் சூடும் தரணியில் உன்பணி தனித்துவமே தனித்துவத்திலும் ஒரு வித்தகமே ! இணையத்தின் துடுப்பில் இளையவர் தொகுப்பில் எழுத்தின் வேரில் படைப்பின் உயர்வில் உருவாக்கப் படைப்பில் இமயம் நீ உலக வலத்தில் உனக்கு மட்டுமே உரித்தான வித்தகம் அதுவே தனித்துவம் பாமுக ஒளியே பரிதியின் சுடரே வாழிய பல்லாண்டு வளமோடு நீ ! https://www.youtube.com/watch?v=kJOxwvnftBU