உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தங்கசாமி தவக்குமார்

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : வளர்ந்த குழந்தைகள் தாமே 27/04/2023 கள்ளமில்லா உள்ளம் கொண்ட வள்ளல் ஆனவர் மாசுபடா உறவு தனை வாரி கொடுப்பவர் நாளை வரும் பொழுதுகளை மறந்து என்றுமே புத்தம் புது மலர்களை போல் பொலிவு கொண்டவர் அடம் பிடிக்கும் ஆற்றலோடு பிறர் மனதில் வாழ்பவர் என்றும் இவர் இறை ஈர்ந்த வளர்ந்த குழந்தைகள் நம் கைகளிலே தாங்கி கொள்ள வலிமை வேண்டுவோம் அவர் வலிமை வேண்டுவோம்!!!