உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தங்கசாமி தவகுமார்

தங்கசாமி தவகுமார்

கவி : விடியலின் உன்னதம் 03.03.2022 கிழக்கு வெளிக்கும் உன்னதம் கண்டு உள்ளத்தில் ஒரு படி உற்சாகம் மேவிடும் நேற்றை பொழுதின் தடங்கல் கையினில் இன்றைய பொழுதை திறம்பட நகர்த்த விடியலின் கதிரொளி உன்னத ஊற்று தூங்கிய புல்லினம் பூவினம் பட்சிகள் இன்றுதான் பிறந்தோம் என்ற உன்னதம் விடியலில் அரிதிலும் அரிய உயிர்ப்பிற்கு கதிரவன் அவனே கருணைக்கு முதல்வன் விடியலில் அவன் வடிவம் காண்பது நம் வாழ்விற்கு மலர்வு போட்டியும் புகழும் ஆதிக்க வெறியும் நிறைந்த அரசியல் சந்தையில் நாணயமும் நம்பிக்கையும் வெளிச்சமிட மனிதம் பிறக்க இன்றைய விடியலும் நாளைய விடியலும் வெளிச்சத்தை தரட்டும்!!!