உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஞாலத்தின் கோலம் 744

ஞாலத்தின் கோலம் 744

ஞாலத்தின் கோலம் செல்வி நித்தியானந்தன் காலம் மாறியே கடும் குளிராய் காற்றுடன் பனி வேகமாய் கொட்ட களிப்பில் சிறுவர்கள் சறுக்கி விளையாட கனத்த மனதுடன் நானும் இரசிக்க காலை வேலை கடுங்குளிரில் செல்ல கைவிரலும் என்னை தாண்டியே போக வழுக்கும் தெருவில் மெல்ல ஊர்ந்திட வலுவாய் நானும் வந்து சேரவே வெளியில் குளிரும் வீட்டில் வெக்கையாய் வெந்த தணலில் உடம்பினை காச்சியே இருமல் தடிமன் இரண்டும் சேர்ந்திட இயற்கையின் கொடையில் இதுவும் ஒன்றே