உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 607 நினைவிருக்கும் வரையில் இந்தப் பதிவிருக்கும் ஒரு தேசம் உருவாக்க நினைத்தது பாவமா பெருங்கனவொன்றை கொண்டதால் கிடைத்த சாபமா மொழிகளின் மூலமொழியை பேசும் இனமொன்று அழித்தொழிக்கப்பட்ட கொடுமையை கூறவா இன்று மே 18 மனிதநேயத்தை தொலைத்த நாள் மேதினியே வெட்கி தலைகுனியவேண்டிய நாள் கணங்களுக்குள் கொலைகள் எண்ணுக்கணக்கின்றி நிகழ்ந்தது இனமொன்றை சிதைதுமே பழிதீர்த்து உலகம் மகிழ்ந்தது நம்பினார் கைவிடப்படாரெனும் கோட்பாடு போட்டுடைக்கப்பட்டது கேளுங்கள் தரப்படுமெனும் வாக்கியமும் செயலிழந்துவிட்டது கொலைசெய்வதை கலையாகக் கொண்டவர்கள் தலைப்பட்டார்கள் விலையற்ற உயிர்களை ஈவிரக்கமின்றி கவர்ந்திட்டார்கள் ஆயிரமாயிரம் சிலுவைகள் தோள்களில் சுமந்த இயேசுநாதர்கள் பேய்களிடம் சிக்கியே உன்னதர்கள் விட்டார்தம் உயிர்கள் புத்தர்வழி வந்தவர்களும் புத்தசித்தாந்தத்தை குழிதோண்டி புதைத்தனர் இரத்தம் குடிக்கும் அரக்கர்கூட்டம் தமிழினத்தை வதைத்தனர் ஆண்டுகொண்டோர் தந்தாரே மாறாத காயம் மாண்டுபோனதே உலக மாந்தர்தம் நேயம் பஞ்சமா பாதகரின் இராட்ச்சததனத்தை நெஞ்சும் மறந்திடுமா மிஞ்சியிருப்போர் எம்மெண்ணத்திலந்த கொடிய காட்சிகள்தான் மறைந்திடுமா ஜெயம் 18-05-2022