உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 740 நல்ல மனிதன் யார் இல்லாதவருக்கும் உள்ளதை பகிரும் உள்ளத்தோன் தள்ளாது எவரையும் அரவணைக்கும் குணமுடையோன் சொல்லாது செயலாற்றி செய்வதிலே நிறைவடைவோன் பொல்லாதவரும் இரங்கிவிடும் தனியான சிறப்புடையோன் சுற்றத்தை குறை காணாமல் சேர்ப்பான் கற்றபடி அறியாமை பேணாமல் ஒழுகுவான் தற்பெருமைகொள்ளாது உறவாக்கி எளிமையாக பழகுவான் பெற்றவரை தெய்வமாக்கி வணங்கியே மகிழ்வான் தீதுமிகு மாந்தரிடம் விலகியே இருப்பான் சூதுவாதை புரியாது உண்மையை உரைப்பான் சாதுவாக இருந்துமே சாதித்து வருவான் போதுமானவரை பிறருக்காய் தன்னையே இழப்பான் பணமே வாழ்க்கையென பேயாய் அலையான் தனக்கென தரணியில் எதுவும் சேர்க்கான் மனந்தனில் பாவத்தின் சாத்தானை உட்காரவைக்கான் கனவிலுங்கூட அடுத்தவருக்கு தீமைகள் நினையான் யார் இங்கு நல்ல மனிதர் பார் இவரே பாரின் புனிதர் சேர் இவருடன் ஒன்றாய் சேர் ஊர் உலகம் வணங்கும் பார் ஜெயம் 12-09-2024 https://youtu.be/9t_VOFL2WOg?si=MFW9UoCXQDsEX4ba