உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 704 விடைபெறும் ஆண்டே விடைபெறும் ஆண்டதுவை சற்றுத் திரும்பிப்பார்க்கின்றேன் உடைத்து பயணித்த தடைகளைக்கண்டு வியக்கின்றேன் தொடக்கத்திலிருந்து முடிவுவரை எத்தனையெத்தனை பெற்றவை கடந்து வருகையில் எத்தனை கைவிட்டவை நரிகளுடன் உறவாடி வடைகளை இழந்திருக்கின்றேன் கருநாகங்களிற்கு பாலூட்டி கொத்திவிட கலங்கியிருக்கின்றேன் தேழ்களின் தோழமை கொட்டிவிட வலித்திருக்கின்றேன் யானைகளுடன் போராடும் எறும்பாக முழித்திருக்கின்றேன் இருபத்துமூன்றின் பாதைகளிலும் குறைந்ததாக மலர்வளம் இரும்பினாலான மனங்கொண்ட மனிதருடனான வலம் நரம்பில்லா நாக்குகளுடன் வரம்புமீறும் பித்தர்களும் வரந்தரவே வேடமேற்ற கலியுகத்து புத்தர்களும் இன்பத்தை நாட்களுக்குள் குடியேற்றிவிட துடித்தேனே துன்பம் தானேவந்து படியேறிட தவித்தேனே நான் நட்டவற்றில் போனததிகம் வாடியே வேண்டியதெல்லாமே வரவில்லை அருகில் கூடியே கண்டுகொண்ட கனவுகளெல்லாம் இன்னும் உறங்குநிலையிலே வண்ணவண்ண ஆசைமீன்கள் சிக்கியே வலையில் முண்ணூற்று அறுபத்தைந்து நாட்கள் விரைந்ததென்ன எண்ணற்ற எண்ணங்கள் ஈடேறாது கரைந்ததென்ன குறையேசொல்லும் மனிதனாகவே நான் மாறிவிட்டேனா நிறைவைக்கானா மனதினால் நான் கெட்டேனா அள்ளியள்ளிக்கொடுத்த ஆரோக்கியம் அறிவுக்குப் புரியவில்லையா பள்ளியில்லாமல் சொல்லித்தந்ததே அனுபவங்களை அறியவில்லையா மன்னித்துவிடு இருபத்துமூன்றே சுயநலத்தால் புலம்பிவிட்டேன் கண்டவுடன் கிடைத்திடாது நிறையவேதான் கற்றேன் நன்றிகூறி வழி அனுப்பிவைக்கின்றேன் உன்னை நன்மையாண்டே நீ தந்துகொண்டதே உண்மை ஜெயம் 28-12-2023 https://youtu.be/v0ak11tvpRc?si=g7Wqw0tBzmQQ7cCf