உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 702 மனிதத்தின் நேயமே மனித வாழ்க்கைக்கு அடிப்படையான தேவையிது தனித்துவிடாது உயிர்களுக்கு ஆற்றும் சேவையிது வாழ்தலின் உண்மையான அர்த்தங்கள் எவையாவன தாழ்வில்லா சமூகத்தினை உருவாக்குதல் அவையாவன ஓரறிவோ ஆறறிவோ அன்புடன் பழகு பாரினிலே இதுவன்றோ உண்மையான அழகு காக்கை குருவிகளும் எங்கள் சாதியன்றோ காக்காவிடின் மரஞ்செடியை இல்லையங்கு நீதியன்றோ இயந்திரங்களோடு பழகிப்பழகி இரக்கமும்தான் மறந்ததோ இதயத்திலே மனிதந்தேய்ந்து உணர்வுகளும் மரத்ததோ யாதும் ஊரே யாவரும் கேளிர் வேதம் இதுதான் கொடுத்து வாழ்வீர் பார் நிறைத்தே மக்கள் உயிரோடு யார் யார்தான் இங்கு உயிர்ப்போடு இறைவனைக் காணலாம் மனிதத்தின் மூலம் இதையுணர்வோர் அடைவார்கள் வாழ்க்கையிலே அனுகூலம் ஆண்டான் அடிமை இடைவெளிகள் அழிவங்கு ஆண்டவரை வணங்கிவிட்டு அலகையாதல் இழிவிங்கு ஏற்றங்கள் இறக்கங்கள் தற்காலிக நிகழ்விதுவே மாற்றங்கொண்டால் மாந்தர்களும் மாநிலத்தின் மகிழ்வதுவே பண்பு என்பது எல்லோரிடத்திலும் உண்டு மண்ணிலிருக்கும் காலத்திலிதனை அறிதலும் நன்று எண்ணத்தில் உயர்வினை உருவாக்கிக் கொண்டு கண்ணெனக் காப்பதை காத்தலே தொண்டு ஜெயம் 06-12-2023 https://youtu.be/vMAP2ecq9nM?si=nF3Pb_4tHHFtCMfP