உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 701 கல்லறை வீரரின் கனவிதுவோ மொழியை உயிராக்கி இனத்தை உயர்வாக்கினாரே நில விசுவாசிகள் தேசத்தைப் பற்றிய கனவு சாவுக்குப் பக்கத்தில் வாழ்க்கை உண்ணாது உறங்காது சுமையைச் சுமந்து ஊரைக்காத்தார்கள் சுவாசத்தின் வெப்பம் தணியவில்லை வீரத்தின் தீரம் தீரவில்லை தம் கனவு ஒருநாளில் நிஜமாகுமென கொண்டு நெஞ்சில் காவிய இலட்சியத்தோடு உறுதியோடு போராடி நன்று கொடியவர்களை வேட்டையாடி தாயகத்தைக் காத்திடவே என்று மேனியைத் துளைத்தாலும் குண்டு வீழ்ந்திடும் முன்பே கயவனைக் கொன்று கலாசாரத்தை களங்கப்படுத்தி சீரழிக்கவைக்கும் இன்றைய நிகழ்வுகள் பண்பாட்டைக் கட்டிக்காத்தவரை புண்படவைக்கும் தகாத பழக்கங்கள் போதையில் தடுமாறும் புதிய தலைமுறையின் அழிவுப் பாதைகள் கல்லறை வீரரின் கனவிதுவோ சற்றும் அறியாயோ எம்சனமே விலைமதிப்பற்ற தங்கள் உயிர்களை மொழிக்காக காணிக்கையாக்கியதும் எதற்காக எம் தேசம் எம் பாரம்பரியமென போட்ட கோசங்களும் எதற்காக பிற மொழியும் பிறமதமும் உள்நுழையாது தாழ்ப்பாள் போட்டதும் எதற்காக சீர்கேடுகளெல்லாம் நிகழுமென அன்றே உணர்ந்து களமாடினர் அடையாளத்திற்காக ஜெயம் 22-11-2023