உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 604 வேண்டும் வலிமை குழந்தைகள் எல்லாம் செல்வங்கள் ஆகட்டும் வளர்கின்ற போதே நம்பிக்கை பூக்கட்டும் கூர்மையாகிப் புலன்கள் சிறப்பும் அடையட்டும் ஆர்ப்பாட்டக் குழந்தையும் பன்மடங்காய்ப் படைக்கட்டும் பிறந்த மழலையெல்லாம் சிறப்பின் வடிவம்தான் சிறப்பான தேசத்தைக் கட்டும் ஆரோக்கியத்தூண் ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் உற்சாகத்தை விதைப்போம் ஒவ்வாதெனும் எண்ணங்களை வேரோடு சிதைப்போம் வலிமையை உண்டாக்குவது சவாலான விடயம் கலைந்திட இறுக்கமும் நுழைந்திடும் விடையும் குறைகளைக் காண்போர் குறைபாடு உள்ளோர் அறிவினைத் திறப்பவர் சுமையாக நில்லார் சித்தமது துணிந்திட்டால் அதுவே போதும் புத்தியதில் விலகும் பயத்தின் பிடிவாதம் அறிவின் அடிப்படையிலான பூலோக வாழ்வு இறுக்கும் புலனிலும் மதியதன் நீள்வு அவப்பெயரை பெயர்த்து எடுப்பதே வலிமை அவமான நினைப்பை தூக்கியெறிவதே வலிமை சமூகத்திற்கென்று சிலபல கடமைகள் உண்டு சமத்துவத்தை சகலருடனும் பேணிடல் நன்று ஜெயம் 27-04-2022