உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 700 விலாசத்திற்கு சொந்தக்காரன் நான் மட்டுமல்ல மகிழ்ச்சி வடிவெடுத்து அரங்கேறிய நிகழ்ச்சியாக அர்த்தங்களை காவி கணங்கள் சொட்டிக்கொண்டன வாழ்த்தும் வார்த்தைகளை அகப்படுத்தியது அகம் உறவுகளின் உன்னதங்களுக்குள் உருகிக்கொண்ட வேளையது சந்தோச மிகுதியால் உள்ளம் தத்தளித்தது செவிகளையுரசிய பாராட்டுக்கள் சுகங்களை பிரசவித்தன இன்பம் பொழுதை ஆக்கிக் கொண்டாடியது நம்ப முடியவில்லை கனவொன்று நிஜமானது கொட்டிக் குவித்த கற்பனைகள் அற்புதமானது சிந்தித்து வரைந்த வரிகளும் தத்துவமானது எழுதிய பாக்களால் கவிஞனெனும் முகவரி பிறவிப் பயனை அடைந்ததாக மனத்திருப்தி பேரன்பு கொண்டவர்களுடனான பூலோகப் பயணம் தாயும் சேயும்போல நிறைவாகியது சொந்தம் இரசிப்பவர் மத்தியில் வாழ்தலே அருள் அவ்வரத்தைப் பெற்றேன் இதுவே வாழ்க்கையானது ஜெயம் 16-11-2023 https://youtu.be/iIAmTgWcGm4?si=jwvReCBayxOh2ERi