உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

பள்ளிக்காலம் கவி 667 வசந்தம் காலத்தை தத்தெடுத்தது பசுமை நினைவுகளை பெற்றெடுத்தது ஐயமேதுமில்லை பையன்களாக இருக்கையில் கள்ளத்தனமுமில்லை வில்லத்தனமுமில்லை நெஞ்சில் பாராமுண்டோ கொஞ்சும் நேரமுண்டு ஏக்கங்களில்லாத தூக்கங்களன்று தோழனாய் தோழியாய் சுற்றியே உலகம் நாளதை மகிழ்ச்சியின் உச்சத்திலேற்ற்றியது தாண்டியே அமைதியை குழப்படிகள் வேண்டியதெத்தனை பிரம்படிகள் பிடித்ததை படிக்காவிட்டாலும் படித்தவையெல்லாம் பிடித்தது பருவம் அதுவோ பூந்தோட்டம் உருவம் வடெனப் போலாடும் மழையிலும் போடுவோம் கூத்தாட்டம் தொலைந்துவிடாது நினைவுகள் கூட்டம் சின்னச்சின்ன மனங்களில் வண்ண வண்ண எண்ணக்களிப்பும் மூளைக்குள் அறிவை நுழைக்க நாளை பொன்னாக செலவழிப்பும் குயில்களைப்போல கூவினோம் மயில்களைப்போல ஆடினோம் மயக்கங்களின்றியே சுற்றினோம் பசங்களாய் வாழ்க்கையை கைப்பற்றினோம் ஜெயம் 26-10-2023