உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 666 மனிதக் கடமை மனிதத்தை மதிக்கின்ற மனங்கள் புனிதத்தால் உத்திக்கின்ற குணங்கள் அன்பினால் செய்திடும் கணங்கள் உண்மையை தாங்கிடும் தினங்கள் அறிவின் புரிதலின் செயற்பாடு பிரிவை தடுக்கும் உடன்பாடு சிந்தனை செய்தால் நலத்தோடு சிந்தையும் இருக்கும் பலத்தோடு பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் இருப்பின்பின் காணாத விடையில் பயணத்தில் கற்றதைக் கொண்டு பயன்பாட்டால் நன்மைகள் உண்டு சந்தேகம் என்பது நரகம் நிந்தனை செய்தே நகரும் சந்தோஷம் என்பது சொர்க்கம் சந்தித்தால் நிம்மதி தங்கும் உறவுகள் இல்லையென சொல்லி பிறரை வைக்கலாமே தள்ளி உதவும் மனம் இல்லாதோர் இதயம் இருந்தும் அல்லாதோர் நல்லது கெட்டதை பகுத்தறிந்து எள்ளையும் எட்டாக பகிர்ந்து வாழ்ந்துதான் ஒருக்கால் பார்ப்போமே தாழ்வில்லா வாழ்க்கையை சேர்ப்போமே ஜெயம் 18-10-2023 https://youtu.be/YTpSzuZfR2o?si=ZcjPdKemgs01du6T