உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 662 கறுப்பு யூலை 40 வருடம் மனிதமறியா தேசத்தில் பிறந்தது குற்றம் குனியக்குனிய குட்டிக்கொண்டே இருக்கின்றது சுற்றம் வழியின்றி தவிக்கின்றது பாவப்பட்ட இனமொன்று அழிப்பதற்காகவே கூடவே இன்னோர் இனமொன்று எத்தனை ஆண்டுகள் போனாலும் மறக்காதது சிந்தைக்குள் நெருப்பாக எரியும் உறங்காதது அன்பைப் பற்றி தெரியாத கூட்டம் அன்றுதொட்டு இன்றுவரை அரக்கராய் ஆட்டம் இரக்கத்தை இரந்துமே கேட்பவர் நாம் இரத்தம் சிந்தவென தோன்றியவர் நாம் காணாமல் போகவென பிறவியெடுத்தவர் நாம் வீணாக்கி உடமைகளை அகதியாகுவதும் நாம் தமிழராய்  இருப்பது மண்ணிலே பாவம் நிமிரவிடாதே கிடைத்தது நீங்காத சாபம் மண்ணென்னையும் நீருமாக நாட்டுக்குள்ளே ஈரினங்கள் ஒன்றுபடா இந்நிலையில் தோன்றிடுமோ சமாதானங்கள் ஜெயம் 20-07-2023