உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 657 கவிஞர்களுக்கு வாழ்த்துகள் கொஞ்சுகின்ற தமிழெடுத்து பாக்களினை வடிப்பார் கேட்டுவிடும் உள்ளங்களில் இடமொன்றைப் பிடிப்பார் பஞ்சமில்லை வார்த்தைகட்கு வரிகளைக் கட்டிவிடும் படையெடுக்கும் கற்பனைகள் சொற்களாகக் கொட்டிவிடும் அஞ்சாது துணிந்தே முழக்கங்களை இடுவார் ஆழமான கருத்துக்களால் சிந்தையதை தொடுவார் இஞ்சி இஞ்சியாக இதயங்களைக் கவர்ந்து இரசிகர்க்கு அளிப்பாரே எழுத்தாலே விருந்து வண்ணமிகு தாய்மொழிக்கு சேர்ப்பாரே எழிலை வளமான சொல்லெடுத்து செய்வாரே தொழிலை எண்ணத்திலும் செயலிலும் கவிஞராக வாழும் உறக்கத்திலே கனவினிலும் இந்நிலையே நீளும் உண்டுவிடும் உணவதனை தள்ளியுந்தான் வைத்து உருவாக்கும் கருவதனை ஆரோக்கியமாய் பெற்று பண்புடனே பாட்டெழுதி பாடிடுவார் பாவலர்கள் பொங்குதமிழ் தேசத்திற்கு என்றுமவர் காவலர்கள். ஜெயம் 12 - 06- 2023  https://youtu.be/i1abMLkc7NM