உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 656 எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே சிந்திக்கச் சிந்திக்க முத்துமுத்தாக கொட்டிவிடும் சந்திக்கும் போதெல்லாம் அமுதமுது ஊட்டிவிடும் மந்திரமாய் உச்சரிக்க புகழும் எட்டிவிடும் தந்தே பேரறிவை விலாசம் இட்டுவிடும் எழுத எழுத ஊற்றாகும் எண்ணங்கள் பழுதுபடாது கொண்ட சிந்தையின் வண்ணங்கள் உழுதுகொண்டு மனதை பண்படுத்த ஏராகும் வழுக்கிவிழா கலாசாரத்தைத் தாங்கும் வேராகும் நிலத்திலே பார்த்தது புலத்திலும் பூத்தது அலங்காரம் கூட்டியே அழகையும் சேர்த்தது இலக்கணம் ஆக்கத்தின் மூச்சென ஆக இலக்கியம் உருவென சேர்ந்துமே போக தாளும் பேனாவும் எடுக்காது விடுப்புக்கள் நாளும் நாளும் ஓயாதே படைப்புகள் நீளும் பயணத்தில் நீக்கியே தடைகள் வாழும் வாழ்க்கைக்கும் கிடைத்தன விடைகள் ஜெயம் 06-0602023