உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 655 இஷ்டப்பட்ட வாழ்க்கை அழகானதே வாழ்வை மகிழ்வாக வாழ்ந்திட பழகிடின் வருகின்ற நாட்கள் எல்லாமே திருநாளே தாழ்வென்ற நிலை தரணியில் நிலையில்லை துன்பத்தையும் காதலிக்க புன்னகை உறவாகும் ஏழ்மை என்பது ஏற்றத்திற்கு பூட்டல்ல ஏற்றால் வாழ்வை இன்பம் கருக்கட்டும் வீழ்ந்து மடிந்தாயோ வாழ்ந்து முடித்தாயோ வாடும் பயிர்வாழ நீர் சேரும் மாளிகையில் வாழ்பவர்கள் ஆனந்தமாய் வாழ்வதாக மனதிற்குள்ளே தப்பித்தவறி கூட நினைத்திடலாகாது கேளிக்கையில் கரைபுரண்டோடுவது போலவே தெரியும் கதவைத் திறந்தால் வண்டவாளம் புரியும் கூலிவேலை செய்திடினும் நிம்மதி களைகட்டும் கனிவான குணங்கொண்ட உறவுகளும் அருகிருக்கும் போலியில்லா வாழ்வொன்று தினமும் வாழப்படும் பட்டினி கிடந்தாலும் பாசம் பகிரப்படும் பிச்சை எடுக்குமளவிற்கு ஆண்டவன் வைக்கவில்லை படியளந்திட படைத்தவன் ஒருபோதும் மறந்ததில்லை நிச்சயமற்றதே இந்த பூலோக பிறப்பு நிறைவாழ்வோ குறைவாழ்வோ வாழ்வதே சிறப்பு கச்சிதமாய் வாழ்ந்து கஷ்டங்களை களையலாம் கவலைகள் நெருங்காது வாழ்வை பாதுகாக்கலாம் உச்சம் அடைவதற்குஉருப்படியான வழிகளுண்டு உன்கால்கள் முடிவு செய்யட்டும் ஓடுவதற்கு மற்றவர் வழியில் உட்புகாத வரையில் மனிதர்க்கு பிரச்சினை பின் தொடராது அற்புதமான ஒருமுறை பூமியின் இருக்கையது அதற்குள்ளாக எதற்காக இல்லாதோரென்றும் இருப்பவரென்றும் சொற்ப காலம் அற்பமான வாழ்க்கை சில தருணங்களில் பலவீனமும் வீழ்த்திவிடும் வற்றாத வளங்களை தாங்கிய மண்ணுலகு வரவாக்கி அவைகளை வாழ்வதுதான் அழகு ஜெயம் 01-06-2023 https://youtu.be/BWEvne6Ocms