உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 669 சித்திரை மகளே வருக இத்தரைக்கு மகிழ்வைத் தருக சித்திரை மகளே இனிதாக வருக சிந்தியே வரத்தினை விடியலைத் தருக இத்தரை மீதினில் வளங்களும் பெருக தந்திடுவாயே வாழ்க்கையில் மகிழ்ச்சியை நெடுக பசி பட்டினி பாரினைச் சூழுதே புசிக்க உணவின்றி பஞ்சமும் ஆளுதே வசிக்கவே முடியாத காலமும் நீளுதே கசிந்துளம் உருகாயோ வறியவர் வாழவே பலரது இரவுகள் இன்னும் விடியவில்லை உலகத்து எல்லைகளில் துயரங்கள் முடியவில்லை கலவரமான நிலவரம் ஏனெனெப் புரியவில்லை மலருமாண்டே தீராயோ பூமிப்பந்தின் தொல்லை சூது நிறைந்த பூலோகமாய் கண்முன்னே தீதுசெய்வோர் தமைமறைத்து அதன் பின்னே யாதுமிங்கு யாவர்க்குமில்லை நீதியின்றி மண்ணே போதுமிது நற்செயலை மொழிவாயோ சித்திரைப்பெண்ணே ஜெயம் 13-04-2022