உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 652 வெறுமை போக்கும் பசுமை பச்சைநிற ஆடையை மண்மாதா பூண்டாள் பயிர்களெல்லாம் உயிர்கொண்டு உருத்தரித்து மகிழ்ந்தன இச்செயலைக் கண்டே மனமும் மயங்கிடும் இதுவரைக்கும் இல்லாத புத்துணர்வு பிறந்திடும் உச்சபட்ச ஆனந்தத்தை உயிர்களெல்லாம் அடைந்திடும் உணவுப்பஞ்சமதை வேர்விட்ட தாவரங்கள் விரட்டிடும் அச்சம் விரட்டும் வாழ்வு உதித்திடும் அங்கும் இங்கும் பசுமை பங்காற்றிடும் வித்தெல்லாம் முளைவிட்டு செடியாகி மரமானது வாடிவாடி மாண்டதுவும் மீண்டெழுந்து செழிப்பானது சித்திரையை தாண்டிவிட்டால் சித்திரத்தின் அழகேயது சித்தத்தின் உள்நுழைந்து உவகையதும் உட்காந்திடும் முத்திரையை பதித்துவிடும் இயற்கையதன் நிகழ்வு மறுமலர்ச்சி நுழைந்துவிட வெறுமையது விலகும் வீட்டிலுள்ள தோட்டம் பொழுதினைப் போக்கும் வீசுகின்ற தென்றலும் வாசத்தைச் சேர்க்கும் ஊட்டிவிடும் தாய்ப்பறவை குஞ்சுக்கு அன்னம் உதிர்த்துவிடும் பாசங்கண்டு உள்ளமதும் உருகும் வாட்டிவைத்த வருத்தங்களும் விடுமுறையைக் காணும் விளைந்துகொண்டு படி அளக்கும் செடிகொடியும் வீட்டிலுள்ள நிலைமையினை மாற்றிவிடும் பசுமை வண்ணங்களாக எண்ணங்கள் தனிமை அகன்றுவிடும் ஜெயம் 10-05-2023 https://youtu.be/RbdUVnQkCWM