உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 648 சித்திரை வந்தாலே சித்திரை வந்தாலே வசந்தத்தின் அறிமுகம் சிந்தையும் இனம்புரியாதே மகிழும் முத்திரை பதிக்கும் இளவேனில் காலம் மண்ணகம் பசுமையைத் தாங்கும் புத்தாண்டை இந்த மாதமே பிரசவிக்க பரவசத்துள் இதயமும் மிதக்கும் புத்துணர்சி பிறந்து புலம்பலும் அகல பிரமாதமாய் வாழ்க்கை இருக்கும் கண்ணுபடுளவிற்கு பூக்களும் கோலங்களைக் கொள்ளும் காணாத அழகும் தெரியும் தன்னிலை மறந்து தேனீக்கள் கூட்டம் தேனுண்டு மயங்கித் தள்ளாடும் புன்னகை பூத்தபடி உயிர்த்திடும் இயற்கை பொன்னென பொழுதினை மாற்றும் வண்ணங்களைத் தீட்டும் கலைஞனாய் சித்திரை வர்ணிக்க வார்த்தைகள் வேண்டும் வாராயோ வாராயோ சித்திரையே இத்தரைக்கு வன்மங்களை தகர்க்கும் ஜென்மமாக தாராயோ தாராயோ வளமான வாழ்வை துன்பத்தைக் குறைக்கும் இறையாக தீராத பிணியெல்லாம் தீர்ந்துவிடும் என்றெண்ணி தீர்வுதரும் திக்களாய் எண்ணுகின்றார் சீராய் அனைத்தையும் சரிசெய்ய வருவாயே சீவியத்தை சீர்படுத்தி தருவாயே வாங்கியே மறுபிறப்பை மரங்களும் துளிர்த்தன வான், வெளிச்சத்தை வழங்கிவிட தூங்கியோ கிடந்தன பறவைகள் விலங்குகள் தாண்டியே இருப்பிடம் வெளிவந்தன நீங்கிக் கொண்டதால் குளிரும் பனியும் நாணலும் வெட்கத்தை நீக்கியதே ஊக்கத்தைத் தந்திடும் பன்னிரெண்டில் ஒன்று உள்ளங்கள் கொண்டாடும் இதுவென்று ஜெயம் 12-04-2023 https://youtu.be/I_XtA2RWnZI