உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 646 மாசில்லா உலகம் படைப்போம் பாதியில் வந்த வேதியலால் ஆதியின் தன்மையில் மாற்றம் இயற்கையை விட்டு விலகி செயற்கைக்கு உட்பட்ட வாழ்வு தொழிற்திறன் கூடிய தொழிற்சாலைகள் கழிவுகள் வாய்க்காலை நிரப்பின பாவம் செய்ததோ ஏரிகள் சாபமிது களங்கப்பட்டன நீர்நிலைகள் தூசுகள் காவிய வளி மாசுபட்டுக்கொண்டது பூமி தாய்மையை கொண்டாடும் எவரும் தூய்மையை பின்பற்ற வேண்டும் குப்பைகளால் நிறைகின்றது அவனி உப்பிட்டதிற்கு செய்யும் துரோகம் கணக்கில்லா உயிர்களின் சொத்து உனக்கென்றும் எனக்கென்றும் இல்லை பயிர்களைப் பற்றி சிந்திக்கவில்லை உயிர்களின் பக்கமும் அக்கறையில்லை பெருகிவிடும் ஆபத்தை அறியவில்லை அருகிவரும் வளங்களையும் உணரவில்லை உற்பத்தி நிலையங்களின் அதிகரிப்பு சுற்றுச்சூழலில் ஏனோ ஆர்வமில்லை காற்றில் கரியமலவாயுவின் ஆக்கிரமிப்பு ஆற்றில் திரவக்கழிவுகளின் ஆதிக்கம் சுற்றம் கழிவால் திணிப்பு தொற்றுநோயின் உற்பத்திசாலையாய் காசினி குடிக்கும் நீரும் குறைகின்றது பிடிப்பு இல்லை அதைப்பற்றி சிந்திக்கா விட்டால் இப்போதே சந்ததியும் பின்னர் கலங்குமன்றோ புனிதமான பூலோகம் அமைப்போம் மனிதத்தோடு வலம் வருவோம் ஜெயம் 29-03-2023 https://youtu.be/PRmHveeO64w