உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 645 கிடைத்தற்கரிய அருங்கொடையாம் பட்டை தீட்டினால்தான் வைரம் பொலிவாகும் பட்டு உணர்வதிலே வாழ்க்கை தெளிவாகும் புற்களையும் பதர்களையும்விட மானுடம் பெருமை இற்றைவரை இவ்வுலகில் கண்டதெல்லாம் அருமை இன்பம் விட்டுச் சென்றாலும் விலகி துன்பம் தொடரினும் ஒட்டியே பழகி கண்டெடுத்த புதையலாய் பூலோக வாழ்வு கொண்டாடிக் கழிக்கையிலே வந்திடுமோ தாழ்வு விரைகின்றது நரைதிரை வரைந்தே காலம் கரைந்து நிழலும் தள்ளாடும் கோலம் உரைக்கின்றது விதி தேகம் நிலையில்லையென தரைமேல் பூப்பெதெல்லாம் பூத்தபின்னே வாடுமென நல்லதோ கெட்டதோ வாழ்க்கையிங்கு பூரணமாக வல்லவராம் பரம்பொருளும் ஆட்டத்திற்கு காரணமாக உள்ளத்திற்கு பிடித்தபடி பயணம் நகர்கின்றது எள்ளலவும் குறைவின்றி காலமும் பகிர்கின்றது சொந்தமென்றும் உறவென்றும் சொர்க்கமது பூமியாக இந்தநிலை தந்ததந்த வணங்குகின்ற சாமியாக பந்தின்மேலே வாய்த்ததிந்த மானிடத்து ஜென்மம் வந்திடாதோ மறுபடியும் வையகத்தில் இன்னும் ஜெயம் 22-03-2023 https://youtu.be/ToUy9Npyms8