உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 642 வாழ்ந்த சுவடுகள்  வாழ்ந்திட்ட மூத்தோரின் அறிவுரையைக் கேளு வருங்காலம் வசந்தத்தை சேர்க்குமங்கு பாரு ஆழ்ந்து இதை சிந்தித்தால் உண்மையங்குண்டு அவர்களையே நிழலாகத் தொடர்வதிங்கு நன்று வீழ்ந்தவர் எவரென்று உற்றுநோக்கி பாரிங்கு விடையங்கு கிடைத்துவிடும்  முதியோரை மதியாதாரவரென்று மூழ்கி முத்தெடுக்க வாழ்க்கைக் கடலில் மறக்காது பெரியோரின் கருத்துக்களைப் பேணு முன்னோர்கள் அனைத்திலுமே சிறந்துமே விளங்குபவர்கள் மரியாதை ஒழுக்கங்களை தன்னகத்தே கொண்டவர்கள் கண்களாக மொழியையும் பண்பாட்டையும் பார்ப்பவர்கள் காலங்களை இயற்கையாக மெய்யாகக் கழித்தவர்கள் உண்மையிலே அனுபவம்பெற்ற பழுத்த மரங்கள் உறவுகளில் முதியவர்கள் நம் பெரியவர்கள் இன்றைய குழந்தைகளிற்கு வழிகாட்டும் வாழ்ந்துகாட்டிகள் இந்தத் தலைமறை சம்பாதிக்கவேண்டிய சொத்தவர்கள் இழக்கும் வரை அவரருமை புரிவதில்லை இறந்தவுடன் உண்மைதானது என புலம்பும்நிலை பழகுவதற்காக அவர்கள் ஏங்கித் தவிக்கின்றார்கள் பழசுகள்தானே அவர்களென ஓரங்கட்டலாமா ஒதுக்கலாமா அளவில்லாத அன்பை அள்ளித்தர ஏங்குகின்றார்கள் அவர்களின் உணர்வுகளை மதிப்பது கடமையன்றோ குலம் காத்துநின்ற குலசாமிகள் அவர்கள் கூடவிருந்தே மூத்தவரை பார்த்தவரை கொண்டாடுவோமே ஜெயம் 28-02-2022 https://youtu.be/MFlHMxrj_qA