உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 637 ஜென்ம பந்தம் உண்மைச் சொந்தம் இருமனம் இணைந்திட்ட  திருநாளும் வந்தது அன்பும் மகிமை கண்டது உருவங்கள் இரண்டென தெரிந்தாலும் வெளியில் உள்ளங்களின் ஓசைகள் ஒன்றென நெருக்கத்தின் அதிகரிப்பில் காதல் சிறப்படைந்தது பாசம் இல்லறத்துள் காணிக்கையாக்கப்பட்டது திருமண பந்தம் புதியதோர் சொந்தம் வாழ்க்கை மகிழ்ச்சியை சுவாசித்தது மண வாழ்க்கை மனம் கோணாமலே நாளுக்குள் இன்பம் வரவானது தனக்கென்று இல்லாமல் தமக்கென்ற வாழ்வு உறவு உன்னதம் அடைந்தது கணக்கில்லா விட்டுக்கொடுப்புக்கள் காரணம் கல்யாணம் சுகங்கள் கணங்களை உண்டாக்கின தினம் ஜீவன்களை ஒன்றாக்கிய தினம் தேனுண்ணும் வண்டாகிடும் மனங்கள் கவியும் இசையும் இணைந்தது போல நேசத்தைப் புதைத்த பந்தம் தவிப்புகள் பாசத்தை பரிமாற என்று ஜென்மம் சந்தோசத்தை தாங்கிக்கொள்ளும் தெவிட்டாத ஆனந்தம் அழகான காலம் இணைவதால் நிகழ்ந்திட்ட அதிசயம் புவி வேறொன்று இனித் தேவையில்லை காதலில் வைக்கவில்லை மிச்சம் பெண்ணுக்கு இணையாய் வேறொரு படைப்பா இல்லவே இல்லை பூலோகத்தில் இன்னொரு வீட்டில் ஒளியேற்றி வைத்து தொழிற்படுவாரே பொன்னாக மின்னியே அன்றாடம் கழிந்தது வாழ்க்கையை எழிலாக்கி அன்பே என்பது மந்திரமானது ஒன்றிய சுவாசங்களின் ஒரு மூச்சு ஆயுளுக்கும் விட்டு போகாது ஜெயம் 25-01-2023 https://youtu.be/D3qkKJQKcMI