உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 636 பெருகிடும் வலிமை பெற்றுயர தடையேது தோஷங்கள் அனைத்தும் நீங்கி சந்தோஷம் சேர்ந்திடும் வாசத்தை நிறைத்துக்கொண்டே பூக்களும் அழகாய்ப் பூத்திடும் நேசத்தை மின்னும் வைரங்கள் உறவுகளாய்க் கிடைத்திடும் வாசல் தேடிவந்தே நல்வாழ்க்கை தன்னை காணிக்கையாக்கிடும் தடைகளை உடைக்கும் வலிமை மனதில் பெருகிடும் அடைந்துகிடந்த காலம் போயே கோலம் உருமாறிடும் படைக்கும் காலகட்டம் வாழ்க்கையை வட்டமிட்டே சுத்திடும் கடைசியில் தொட்டதெல்லாம் பொன்னாகி வாழ்வு கனிந்திடும் வந்ததென்ன நாளதுவும் காணாத சொர்க்கங்களை கண்டுவிட தந்துகொண்டு இன்பம் கோடி வாழ்வை சுவைத்துவிட வெந்தநிலை நீங்கிடவே சுருங்கிய பொழுதுகள்  விரிந்திடுமே முந்தைய ஆண்டைப்போலில்லாது இவ்வாண்டு பலத்தை சேர்த்திடுமே தூங்குவதற்கினி நேரமில்லை சோம்பலும் தள்ளியே போய்விடும் நீங்கிடும் பிணிகள் நலமான வாழ்வும் வெளிப்படும் தீங்கின்றி நன்மைகள் விழுகின்ற நிழலெனத் தொடர்ந்திடும் தாங்கியே சுமக்கும் பூமியிலேயினி விதைத்ததெல்லாம் விளைந்திடும் ஜெயம் 17-01-2022 https://linksharing.samsungcloud.com/aSkZ1VAmP02w