உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 633 உயிர்நேயம் போனதெங்கே மனிதநேயம் மனிதன் மாறிவிட்டான் அன்பை அறிமுகப்படுத்த மனிதன் மறந்துவிட்டானா காணவிரும்பாது அடுத்தவர் வலிகளை என்று தன் உணர்வுகளைத் தூங்க வைத்துவிடட்டானா வானம் பொழியா கட்டாந்தரை பூமியாக நேயத்தில் ஏன்தானோ பாலைவன வறட்சி ஆனதென்னவோ உயிருடன் கலந்த நற்பண்பிற்கு கையேந்துபவர்கள் அதிகரிக்குமளவிற்கு மனிதத்தில் பற்றாக்குறை மண்ணில் தொலைந்த மனிதத்தைத் தேடுகிறார் பிறர் மட்டுமே முதலிலே மாறவேண்டுமென தன்னில் தொலைந்த நேயத்தை விட்டுவிட்டார் அவரே தூக்கியெறிந்துவிட்டதை அவர் அறிவாரோ நின்றுபோகும் ஒருநாள் நிலையில்லா வாழ்வு மூச்சு உள்ளவரை பகிர்ந்துண்பவன் இறைவன் என்று விழித்தெழுவாரோ ஒன்றுபட்ட வாழ்விற்காக அன்றே மனக்குழியிலிருந்து அருள் வெளிவரும் இதயத்தில் இரக்கம் இயங்காது உறங்கிவிட்டால் உயிருமில்லா உணர்வுமில்லா கல்லிற்குச் சமம் உதவும் நிலையில் இருந்துங்ககூட உதவாவிட்டால் அது நாட்டிற்குள் நடமாடினும் காட்டுத்தன்மை மதங்களும் அவைகளை கடைப்பிடிப்போரும் கோடானகோடி இருந்தும் மனிதாபிமானம் போனது எங்கோடி எதனால் இதுநாள்வரை மனங்கசியும் பழக்கமில்லை உயிர்நேயம் அறிவிற்குள் வற்றிப்போய்விட்டதென்று பொருள் ஜெயம் 08-12-2022 https://youtu.be/Ht3hyeurmq8