உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 630 எல்லாம் அவன் செயல் இதுவும் கடந்து போகும் என்பார் வலியும் வேதனையும் அனுபவிப்பவனுக்கே தெரியும் எதுவும் மனதை மீறியொன்றும் நிகழ்ந்துவிடாது பட்டுத்தெளிந்தவர்கள் பாடுபடுவோர்க்கு சொல்லும் சேதி அதுவாகத்தான் அடிமேலடி வாழ்க்கைக்கு கிடைக்கின்றது போராடிக்கொண்டே பல நாட்களும் முடிகின்றன பொதுவாக சொல்லிவிட்டு யாரும் போகலாம் விதிவிலக்கு விதிக்கு இல்லையென அவரறிவாரோ கூட்டிற்குளுள்ள காற்று கரையும் வரை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டு பயணம் ஆட்டிவைக்கின்றார் ஒருவர் எங்கோ இருந்து கொண்ட வேடங்களுக்கு இயக்குனரும் அவரே பாட்டிலே தத்துவத்தை பாடிவைத்துத்தான் என்ன அதைப்புரிந்து திருந்திக்கொண்டவர்தான் யாரோ ஏட்டிலே இல்லாத மெய்யியல் கோட்பாடா அதன்படி நடந்திட ஊழ்தான் விட்டுவிடுமா துன்பத்தை வேண்டுவோர் வையகத்தில் இல்லை வலாற்கார வாழ்க்கை பழகுவரும் தானாக அன்றாடம் பூர்த்தி அடையாத தேவைகள் வலிகளின் வழிகளை காலம் அமைத்துவிடும் புன்னகையின் தேசத்திலே வாழவே விருப்பம் நெருங்கும்போது இன்பம் நிகழுமந்த திருப்பம் இன்றிருக்கும் நிலைமை வாசல் தாண்டிப்போகும் என்றவொரு நம்பிக்கையில் ஒவ்வொருநாளும் பிறக்கும் ஜெயம் 17-11-2022 https://youtu.be/pWmfDsDytac