உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 613 மனமே மனமே உருவமற்ற ஒன்றாக  எங்கோ இருந்து ஆட்டிப்படைத்திடும் மனமே நீ எண்ணிய எண்ணமே வாழ்கையுமாகி  மண்ணோடு கழியுது தினமே விழிப்பிலே நினைவுகள் உறக்கத்தில் கனவுகள் எல்லாமும் இதனது செயற்பாடே சோகங்கள் வாழ்க்கையில் கூடுவதும் சந்தோசம் அறிமுகமாவதும் இதனூடே மனம் தூய்மையும் நேர்மையும் ஒழுக்கமும் கொண்டால் ஆலயம் என்பதும் எதற்கு போட்டி பொறாமை வஞ்சகம் கொண்டால் நோய் பிடித்திடும் அதற்கு கல்லாகவிருந்து கல்லாது எதையும் ஆட்டிவித்து ஆடவும் வைக்கும் நல்லதை நினைத்து நல்லதைச் செய்து நிலைதனை மாற்றியும் மெய்க்கும் அந்த மலையிலும் உயரமான இந்த சமுத்திரத்திலும் ஆழமான மனம் அதிசயமே பாசமென்றும் வேடமதும் போட்டிடும் மோசம் செய்தும் கக்கிவிடும் விசமே இருப்பதோ ஒரு மனம் அதனுடன் நடத்தும் போராட்டம் ஓய்வதில்லை ஆயுள்வரைக்கும் ஆட்டிப்படைக்கும் இந்த மனமே ஆண்டுவிடும் வாழ்க்கையின் எல்லை. ஜெயம் 13-07-2022