உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

Kavi 612 மீளெழும் காலம் ஏக்கங்களோடு புலம்பெயர்ந்த கூட்டம் தாக்கங்களை உள்ளத்துள்ளே பூட்டும் கிடைத்ததன்றோ புதிதாக அகதியெனும் பட்டம் அடைந்துகொண்டு உலவிவரும் புதுப்பூமி வட்டம் அழகிய வாழ்வு வெள்ளையரால் வந்தது பழகிய மனிதமும் நிம்மதி தந்தது ஏதிலிகள் தானெனவே காலாகாலமும் இருந்திடலாமா பாதியிலே உணர்ந்ததை மீதியதை திருத்திடலாமா பரதேசிகளா தொடர்ந்தும் இப்படி இருப்பதோ பிறதேசத்தில் இந்நிலை தொடர்வது சிறப்பதோ மீளெழும் காலமிது தாழ்வு மனப்பான்மையகற்றி பாழாய்போன நினைவுகளை மனதைவிட்டு விரட்டி கடக்கவேண்டிய இலக்குகள் குவிந்துமே கிடக்கு முடங்கியே கிடந்துவிட்டால் விடியாது கிழக்கு ஏதிலியாய் ஆயுளுக்கும் இருப்பதிலென்ன பெருமை பாதியில் படித்துக்கொண்டு திருந்துவதே அருமை Jeyam 22-06-2022