உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 610 ஐயைந்து ஆண்டின்முன் புதைக்கப்பட்ட நல்விதை பெருவிருட்சமாய் புலம்பெயர் தேசத்தில் நம்மவர்க்கானதொரு கலையகம் உளம் வாழ்த்திச் சொல்வேன் பாமுகமென்றால் அதுதகும் தேன் சொற்களைக்கொண்டு படைத்தலில் பேரூக்கம் காட்டும் தான் கொண்ட எண்ணத்தை வண்ணமாய்த் தீட்டும் எழுதாத கரங்களெல்லாம் எழுதி எழுதிக் குவித்தன அழகான சிந்தனைகள் மனதில் மெல்லப் பதிந்தன பேசாத உதடுகளெல்லாம் வாய்திறந்து மகிழ்ந்தன தேசத்தின் மொழிமகனால் பல அற்புதங்கள் நிகழ்ந்தன தன்னையுடைத்து என்னையுன்னைப் படைக்கும் தன்மை மண்ணைவிட்டுப் பெயர்ந்தாலும் மண்ணைப்பார்த்தேனிங்கு உண்மை சொல்லப்போனால் வந்தபோது மொழியறிவு பூச்சியம் சொல்லவொரு விலாசமும் தந்தது பாமுகத்தின் இராச்சியம் எத்தனையோ மொழியாக்கங்களை உருவாக்கிய உற்பத்திச்சாலை அத்தனையும் சிறியோர்பெரியோரென நிறைத்திடும் நாளை ஒன்று இரண்டென இருபத்தைந்தாவது ஆண்டில் காலடி பதித்தது அன்றுபோல் இன்றும் பாமுகச் சூரியன் பிரகாசமாய் உதித்தது புலம்பெயர் வாழ்வில் எமக்கொரு மொழிப் பொக்கிஷம் வலம்வந்து கொண்டதால் வரங்கள் பல கைவசம் ஒன்றிக்கொண்டது உயிரோடு நினைவுகளை முடியாது நீக்க நன்றிசொல்ல வார்த்தைகளைத் தேடுகின்றேன் காணிக்கையாக்க இனத்திற்கொரு வரப்பிரசாதமாய் கிடைத்தார் சாதனைத்தமிழன் தனக்கென எண்ணாது வரும் தலைமுறையை எண்ணிடும் வளவன் ஐயைந்து ஆண்டின்முன் புதைக்கப்பட்ட நல்விதை ஒன்று ஐயமே இல்லை மண்ணைவென்று பெருவிருட்சமாய் நிற்குது இன்று ஜெயம் 15-06-2022