உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

சசிச நினைவுநாள் தாயகத்திற்காய் அற்பணித்தாரே தம் வாழ்நாளை நாயகர்கள் அவர்களை நினைவுகூரும் புனிதவேளை காயங்கொண்ட நினைவுகளுடன் விடியினும் அக்காலை தூயவர்கள் அவர்களிற்கு சூட்டிடுவோம் புகழ்மாலை கனவு நிரம்பிய உறங்கா விழிகளோடு உணவு இன்றி பசித்தே வழிகளூடு இனத்திற்க்காய் பட்டனர் சீவனழிக்கும் சிலுவைப்பாடு கணக்கில்லா துன்பங்கள் சூழ்ந்ததன்றோ அவரோடு ஈராயிரமாம் ஆண்டிலே சரித்திரம் படைத்தவர் போராயிரம் செய்தே வெற்றிகள் அடைந்தவர் தீராதென்றும் ஞாபகம் வரமாகக் கிடைத்தவர் மாறாது உள்ளுணர்வு அவர் எமக்காயுடைந்தவர் 28-11-2022