உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-43 02-07-2024 பள்ளிப்பருவம் பெற்றோரின் கனவுகளை புத்தகமாய் முதுகில் சுமந்த பருவம் மற்றவர்க்கு உதவிக் கொண்டு மிதி வண்டியில்ப் பறந்த இப்பருவம்! படிப்பு மட்டும் வாழ்க்கையற்று பட்டாம் பூச்சியாய் பறந்த பருவம் சாதி மத பேதமற்று, சங்கடங்கள் ஏதுமற்று சமத்துவமும், பக்குவமும் கலந்த உருவம். சின்ன சின்ன சேட்டைகளும் சீண்டிப் பார்க்கும் வயசுமிது பழைய நினைவை மீட்கும் போது பசுமை தரும் மகத்துவமுமிது! வீட்டுச் சிறையிலிருந்து திறமைகளை வெளிக்கொணர்ந்த பருவமிது பெற்றோர் போல ஆசானும் பேரறிவு மேலோனும் உணர்ந்த பருவமிது. தொலைந்து நெடு தூரம் போனாலும் தொடர்கதையாய் தொடரும் இப்பருவம் தோற்காமல் மலரும் சில நினைவுகளும் தொங்கி நிற்கும் கனவுகளும் தந்த பருவம். நன்றி வணக்கம் ஜெபா ஸ்ரீதெய்வீகன்.