உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-42 25-06-2024 நடிப்பு நாடக மேடை வாழ்க்கையிது நடிகரும் தானே நாமிங்கு நல்லவன் என பலர் சொல்கையில் நடிப்பும் தெரியுது பாரிங்கே எத்தனை வேடம் தாங்கி விட்டோம் எடுத்த காரியத்தில் ஜெயித்தும் விட்டோம் பெற்றோர் வேடத்தில் நீ இருக்க பிள்ளையாய் நானும் நடித்திருக்க நிறம் மாறும் மனிதனை நீ புறம் தள்ளி விட்டு அறம் செய்யும் பணிதனை நிலை நாட்டு அதுவே இல்லறம் சிறக்க விடும் வலியோடு வாழ்ந்த மண்ணில் பலியான உயிர்கள் எங்கே? கண்ணில் தோன்றிய காட்சியெல்லாம் கனவினில் நின்று போய்விடுமோ? விழியோரம் வந்த கண்ணீரெல்லாம் விதியாய் நடித்த நாடகமா? உலகே நிலையற்றது புரிந்து விட்டால் உனக்கு நடிப்பே தேவையில்லை. நன்றி வணக்கம் ஜெபா ஸ்ரீதெய்வீகன்.