உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-15 22-08-2023 தலையீடு பிள்ளைக்கு மேல் படிப்பு பெற்றமனம் பணிக்கும் வைத்தியராய் வா வெளியே இல்லையானால் உபாத்தியாராய் சான்றிடுவே. நாட்டமற்ற பிள்ளை மனம் வாட்டம் வலி கொள்ளும் சட்டத்தரணியான பிள்ளை பெற்றோரின் தலையீட்டால் முற்றாக முடிக்காமல் தோணி இரண்டில் கால் வைத்தது போல் கோணி மனம் கொண்டு மனவழுத்தம் குடி கொள்ள தன் சொல்லும் தான் கேளா பேதையாய்த் தான் ஆகி பிணமாகிப் போனாளே! நடந்த செய்தி இது கூறும் நீ நடந்திடு நீ நாடும் வழியிலென ஊருக்காக வேடமிட்டு உளம் ஒன்ற வாழாமல் நாட்டமுள்ள வழியில் நட பெற்ற மனமுவந்து பிள்ளை விரும்பியதை கற்க கை கொடுத்தல் கடமை உணர்வோமே! நன்றி வணக்கம். ஜெபா ஸ்ரீதெய்வீகன்.