உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ச

ச

சிந்திக்கவே நேரமில்லாமல் சந்திக்கவே காலம் கிடைக்காமல் முந்திக் கொண்டே வேகமாய் விந்தையாக உலகம் உருளுது தோழா ! நான் , நான் என்றே தினமும் தனக்குள் இறுமாப்பாய் வீண், வீணாய் உழன்ற காலங்கள் கண் முன்னே கதையாய்த் தெரியுது தோழா ! விளக்கைத் தேடும் விட்டிலைப் போல‌ இலக்கைத் தொலைத்து விழுந்த நேரம் தொலைக்க வைத்த கணங்களின் கனமும் முழுக்க நெஞ்சில் சுமந்திடும் நிலையது தோழா ! பகட்டாய்த் தெரியும் வாழ்வைச் சுவையென‌ பிழையாய் எண்ணியே விரயம் செய்த வேளைகள் தெளிவாய் இன்று தெரியும் பொழுதுகள் வலித்திடும் நெஞ்சத்தை வருடும் இதமிது தோழா ! எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை என்பது துல்லியமாய்த் துலங்கும் பொன்னான காலம் கழிந்திட்ட பொழுதுகள் திரும்பவும் கிடைத்தால் பொழிந்திடும் அனுபவம் திகழ்ந்திடும் பருவமிது தோழா ! அறிந்ததைச் சொன்னேன் நான் ஞானியுமல்ல‌ அனைத்தையும் துறந்த முனிவனும் அல்ல‌ அழுதிட்ட பொழுதுகள் உழுதிட்ட அனுபவம் விழுதான உனக்கு மொழிந்திடும் தாகமிது தோழா ! சக்தி சக்திதாசன்