உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

செம்மணி

செம்மணி

ரஜனி அன்ரன் “ செம்மணி “ (B.A) 10.07.2025 செம்மணல் சூழ்ந்தநிலம் செங்குருதியால் செம்மணியானதுவோ உலகின் எட்டாவது அதிசயம் அவலங்களின் அதிசயம் செம்மணி கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு வதையுண்டு சிதையுண்டு வயதுவேறுபாடின்றி புதைக்கப்பட்டனரே உறவுகள் செம்மணியில் ! மண்ணிற்குள் மூடியகனவுகள் மெளனக் குரல்கள் நிறைந்தகாற்று மெளனிக்கப் பட்டதே செம்மணிக்குள் காலங்கள்கடந்தும் காலத்தின் கட்டாயத்தில் புதைகுழிகள் தோண்டப்பட்டு எச்சங்கள் எண்ணிக்கையின்றி எடுக்கப்படுகிறது ஆய்வாளர்களால் ! செம்மணி புதைகுழி மட்டுமல்ல நூற்றாண்டு மூடியபுத்தகம் குழந்தையின் சிரிப்பு ஒருபக்கம் தாயின் அழுகுரல் மறுபக்கமென மண்ணின்மார்பில் புதைந்துவிட்ட மன்னுயிர்களின் மனசாட்சி பேசுகிறதே மழையால் பொலிவுற்ற செம்மணி கண்ணீரால் நனைகிறதே இப்போது ! https://www.youtube.com/watch?v=fK1PYnAflKo