உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

செந்தூரப்பூவே

செந்தூரப்பூவே

சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக நீயும் ஒளிரும் நட்சத்திரம்// சிங்காரங் கண்டேன் சிலுசிலுக்கும் பூவிலே// ரீங்காரம் இடும் வண்டாகிப் பறந்தேன்// ஊஞ்சல் கட்டியே உல்லாசமாய் ஆடவே// எண்ணமே எங்கோ போகுதே தன்னாலே// தன்னானே பாடவா தாமரைக் கொடியே// காணாத காட்சியாய் கண்ணிலே மலர்ந்ததே// வீணான நினைவு தோற்றுமே ஓடுதே// பசுந்தளிராய் பக்குவமாய் விரிந்தாய் மனசிலே// இனிக்குதே சுவையாய் இளமையெனும் பூங்காற்றே// சிவரூபன் சர்வேஸ்வரி