சூடுபிடிக்கிறது உதைபந்தாட்டம்.....
சூடுபிடிக்கிறது உதைபந்தாட்டம்.....
ரஜனி அன்ரன் (B.A) ...சூடு பிடிக்கிறது....09.07.2026
பச்சைப்புல்வெளி போர்க்களமாக
பந்து மட்டும் ஆயுதமாக
வீரர்கள் கால்களோ பம்பரமாக சுழல
விசில்சத்தம் வானைப்பிளக்க
அம்பயரெல்லாம் அங்குமிங்குமாய் ஓட்டம்
காலிறுதி நோக்கி நகர்கிறது ஆட்டம்
சூடுபிடிக்கிறது உதைபந்தாட்டம் !
எந்தஅணி வெல்லுமென்ற அங்கலாய்ப்பு
எல்லோர் மனதிலும் ஏதோ ஒருஎதிர்பார்ப்பு
உணர்வுகளின் திருவிழாவாக
உற்சாகத்தின் பெருவிழாவாக
வெற்றிக் களிப்பின் வீரகாவியமாக
வீறுநடை போடுகிறது உதைபந்தாட்டம் !
நாடுகள்பலவாம் மொழிகளும்பலவாம் பந்துமட்டும் ஒன்றாம்
பந்து உருளும்வரை நம்பிக்கையும் வாழும்
விசில் ஒலிக்கும்வரை விளையாட்டும் தொடரும்
கடைசி நொடியிலும் அதிசயமும் நிகழலாம்
கற்றுத்தரும் அனுபவப்பாடம் உதைபந்தாட்டம்
உலகையே கட்டிப்போடும் உணர்வின் விருந்து இது !
https://www.youtube.com/watch?v=7RtbbJyyMak
